Sunday, September 27, 2020
Home Cinema மூன்று மொழிகளில் வெளியாகவிருக்கும் யோகிபாபு படம்...

மூன்று மொழிகளில் வெளியாகவிருக்கும் யோகிபாபு படம்…

மூன்று மொழிகளில் வெளியாகவிருக்கும் யோகிபாபு படம்…

தெலுங்கு, மலையாளம் ,கன்னடம் மொழிகளில் சாட்டிலைட் வழியாகவும் OTT இணையத்தின் மூலமும் யோகி பாபு நடித்த ‘தர்மபிரபு’ வெளியாகிறது.

 

யோகி பாபு நடித்து சென்ற ஆண்டு தமிழில் வெளியான ‘தர்மபிரபு’ வித்தியாசமான கதைக் களத்தில் வயிறு குலுங்க சிரிக்க வைத்த படம். பரவலான வசூல்கள்,
பார்ப்பவர்கள் மத்தியில் விசில்கள் என்று அள்ளிக் கொண்ட படம்.

எமலோகத்தில், எமன் பதவி காலியாகிறது. அடுத்த எமன் யார்? புதிய எமனைத் தேர்ந்தெடுக்கும் தேர்தல் நடக்கிறது. வாரிசு அடிப்படையில் யோகிபாபுவும், அனுபவம் அடிப்படையில் சித்ரகுப்தனாக உள்ள கருணாகரனும் போட்டியிடுகிறார்கள்.

இவர்களில் யார் எமன் பதவியைப் பெறப்போகிறார்கள்?
என்பதைக் காட்சிகளாக்கி கலகலப்பாகச் சொல்வதே ‘தர்மபிரபு’ படத்தின் திரைக்கதை.

இப்படம் தெலுங்கு ,மலையாளம், கன்னட மொழிகளில் மொழிமாற்றுப் படமாக உருவாகியுள்ளது.

இந்தக் கொரோனாவின் லாக்டவுன் காலத்தில் சாட்டிலைட் வழியாகவும் OTT மூலமும் வெளியிடப்படவுள்ளது.