Sunday, September 27, 2020
Home Cinema பொங்கல் ரிலீஸில் இருந்து தள்ளிப்போகும் ‘அண்ணாத்த’. புது ரிலீஸ் தேதி இதோ

பொங்கல் ரிலீஸில் இருந்து தள்ளிப்போகும் ‘அண்ணாத்த’. புது ரிலீஸ் தேதி இதோ

ஷூட்டிங்க்கை துவங்கும்படி சிவாவுக்கு உத்தரவிட்டது சன் பிக்சர்ஸ் நிறுவனம். ‘அண்ணாத்த’ படம் மூலமாக இணைந்தது சிவா – ரஜினி கூட்டணி. கோலிவுட்டில் மிகப்பெரும் எதிர்ப்பார்ப்பில் இருக்கும் இந்த படத்தின் ரிலீஸ் குறித்த தகவல் கிடைத்துள்ளது.

‘அண்ணாத்த’ திரைப்படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடந்து கொண்டிருந்த நிலையில் திடீரென கொரோனா வைரஸால் ஏற்பட்ட பாதிப்பு காரணமாக படப்பிடிப்பு நிறுத்தப்பட்டது. தற்போது ஊரடங்கில் தளர்வு ஏற்பட்டதும் அரசு படப்பிடிப்புக்கு அனுமதி அளித்தால் உடனே ‘அண்ணாத்த’ படப்பிடிப்பை நடத்த வேண்டும் என சன் பிக்சர்ஸ் நிறுவனம் தெரிவித்துள்ளது, ஆனால் ரஜினி படப்பிடிப்பு வர தற்போது மறுப்பு தெரிவித்து விட்டதால் குழம்பிப்போன தயாரிப்பு நிறுவனம் இயக்குனர் சிவாவுக்கு வேறொரு உத்தரவை விதித்துள்ளது.

இந்த லாக்டவுன் தளர்வுகள் அறிவிக்கப்பட்டதும் ரஜினி இல்லாத காட்சிகளை படமாக்கி முடிக்க சன் பிக்சர்ஸ் நிறுவனம் இயக்குனர் சிவாவுக்கு உத்தரவிட்டுள்ளது. கொரோனாவுக்கு பின்னர் ரஜினி இருக்கும் காட்சிகளை படமாக்க முடிவு செய்துள்ளனர். மேலும் படத்தை அடுத்த ஆண்டு கோடை விடுமுறைக்கு ரிலீஸ் செய்ய திட்டமிட்டுள்ளதாகவும் சொல்லப்படுகிறது. முன்னதாக பொங்கலுக்கு ப்ளான் செய்யப்பட்ட இந்த படம் தற்போது சம்மர் விடுமறைக்கு தள்ளிப்போயிருப்பது ரசிகர்களுக்கு வருத்தமே…