Tuesday, October 6, 2020

தியேட்டர் களுக்கான வழிகாட்டு நெறிமுறைகள் என்னென்ன?



தியேட்டர்களை திறக்க மத்திய அரசு அனுமதி அளித்துள்ள நிலையில் சில வழிகாட்டு நெறிமுறைகளை மத்திய தகவல் மற்றும் ஒலிபரப்புத் துறை அமைச்சர் பிரகாஷ் ஜவடேகர் தெரிவித்துள்ளார். கொரோனா பொது முடக்கத்தான் ஆறு மாதங்களுக்குப்பிறகு வரும் 15ஆம் தேதி முதல் திரையரங்குகளை திறக்க மத்திய அரசு ஏற்கனவே அனுமதி அளித்துள்ளது. 50% சதவிகித இருக்கைகளுடன் மட்டுமே திரையரங்குகள் இயங்க வேண்டும் என்றும் ஒரு இருக்கை இடைவெளி விட்டு ஒரு இருக்கையில் அமரும் வகையில் ஏற்பாடு செய்ய வேண்டும் எனவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

24 டிகிரி முதல் 30 டிகிரி வரை மட்டுமே ஏசியை இயக்க வேண்டும் என்றும் எந்தவித அறிகுறியும் இல்லாதவர்கள் மட்டுமே தியேட்டரில் அனுமதிக்க வேண்டும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. அனைவரும் மாஸ்க் அணிந்த படியே படம் பார்க்க வேண்டும் எனவும், இடைவேளையின்போது எழுந்து செல்வதை ரசிகர்கள் தவிர்க்க வேண்டும் எனவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது. பாக்கெட்டில் அடைத்து வைக்கப்பட்டுள்ள நொறுக்கு தீனிகள் மட்டுமே விநியோகிக்க வேண்டும்.

டிஜிட்டல் முறையில் பணம் செலுத்தவதையும், ஆன்லைன் மூலம் சினிமா டிக்கெட் புக் செய்வதையும் ஊக்குவிக்கவேண்டும். டிக்கெட் கவுண்டர்களில் கூட்டம் கூடுவதை தவிர்க்க முன்பதிவிற்கு அனுமதிக்க வேண்டும் என மத்திய அரசு வெளியிட்டுள்ள வழிகாட்டு நெறிமுறையில் அறிவுறுத்தப்பட்டுள்ளது. தேவையான இடங்களில் கை கழுவும் சோப் மற்றும் சேனிடைசர்களை வைக்க வேண்டும் எனவும் ஒவ்வொரு காட்சியின் முடிவிலும் கிருமிநாசினி கொண்டு திரையரங்கை தூய்மை படுத்த வேண்டும் என்றும் மத்திய அரசு குறிப்பிட்டுள்ளது.

No comments:

Post a Comment

Pages