மக்கள் மீது குறைந்தபட்ச மனிதாபிமானம் கூட இல்லாமல் ஹிந்தி திணிப்பை மக்கள் மீது தொடர்ந்து செய்து வருவதாக திமுக எம்.பி கனிமொழி குற்றம்சாட்டியுள்ளார். சென்னை விமான நிலையத்தில் செய்தியாளர்களிடம் பேசிய அவர் ரயில் டிக்கெட் முன்பதிவிற்கு இந்தியில் குறுஞ்செய்தி வருவது குறித்த கேள்விக்கு இவ்வாறு பதில் அளித்தார்.

தொடர்ந்து மக்கள் மீது துளி அளவும் மனிதாபிமானம் கூட இல்லாமல் எந்தெந்த வகையில் இந்தியை திணிக்க முடியுமா அனைத்து வகையிலும் ஹிந்தி திணிப்பை திணித்து வருகிறார்கள்

எனவும் மக்களின் கஷ்டங்களை கூட புரிந்து கொள்ளாமல் ரயில்வே டிக்கெட் புக் செய்தால் ஹிந்தியில் வருவது மிகுந்த வேதனை அளிக்கிறது என்றும் அந்த இந்திப குறுஞ்செய்தி என்னவென்று கூட மக்களுக்கு புரிய வாய்ப்பே இல்லை என்றும் அவர் கூறினார். இது அவர்களின் மோசமான தன்மையை காட்டுகிறது என்றும் மிகவும் கண்டிக்கத்தக்கது என்றும் அவர் கூறினார்.