நிதி நெருக்கடியில் சிக்கித் தவிக்கும் அரசு போக்குவரத்துக் கழகத்தை மேம்படுத்த அரசு கொள்கை முடிவு எடுப்பதுடன் தேவைப்பட்டால் சட்டம் கொண்டு வரவேண்டும் என உயர்நீதிமன்ற மதுரை கிளை தெரிவித்துள்ளது.

மதுரை அரசு போக்குவரத்து கழகத்தில் மேலாண்மை இயக்குனராக பணிபுரிந்து ஓய்வுபெற்ற சுப்பையா விடுமுறை ஒப்படைப்பு பணம் மற்றும் சமூக பாதுகாப்பு திட்ட நிதி ஆகியவற்றை 18 சதவிகித வட்டியுடன் வழங்க உத்தரவிடக் கோரி வே நீதிமன்ற மதுரை கிளையில் மனு தாக்கல் செய்திருந்தார்.

இந்த மனுவை விசாரித்த நீதிபதி சுரேஷ்குமார் சில குறிப்பிட்ட வழித்தடங்களில் மட்டும் இயக்கப்படும் தனியார் பேருந்துகள் லாபம் சம்பாதிக்கும் போது மாநிலம் முழுவதும் ஆயிரக்கணக்கான பேருந்துகளை இயக்கும் போக்குவரத்துக் கழகம் நஷ்டத்தில் இயங்குவது எப்படி என கேள்வி எழுப்பியுள்ளார். மேலும் மனுதாரருக்கு 3 மாதத்தில் பணப்பலன்களை வழங்க வேண்டும் எனவும் நீதிபதி உத்தரவிட்டுள்ளார்.