நுகரும் மற்றும் ருசி அறியும் தன்மையை இழப்பது கொரோணா தொற்றிற்கான நம்பகமான அறிகுறி என இங்கிலாந்து விஞ்ஞானிகள் கண்டறிந்துள்ளனர். லண்டனில் வெளியாகும் பிளாஸ் மெடிசின் என்ற மருத்துவ இதழில் இது குறித்த ஆய்வுக் கட்டுரை வெளியாகியுள்ளது. திடீரென நுகரும் மற்றும் ருசியறியும் தன்மையை இறந்ததாக கூறியவர்களில் 78 சதவிகிதம் பேருக்கு தொற்று இருந்ததாக அந்த ஆய்வு கட்டுரை கூறுகிறது.

இவர்களில் 40 சதவிகிதம் பேருக்கு காய்ச்சலும் இருமலும் இல்லை என்றும் அந்த ஆய்வில் கூறப்பட்டுள்ளது.கொரோணா இரண்டாவது அலை தொடங்கியிருப்பதாக கூறப்படும் நிலையில் முற்றுப் பெறவில்லை தொற்று பரவலை தடுப்பதில் இந்த ஆய்வு பயனுள்ளதாக இருக்கும் என லண்டன் பல்கலைகழகத்தைச் சேர்ந்த பேராசிரியர் ரேச்சல் பேட்டர்ஹாம் தெரிவித்துள்ளார். வாசனை ,ருசி தெரியாவிட்டால் உடனடியாக தனிமைப் படுத்திக் கொண்டு பரிசோதனை மேற்கொள்ள வேண்டும் என்பதே தங்கள் ஆய்வின் முடிவு என்றும் கூறியுள்ளார்.

பல நாடுகள் காய்ச்சல் மற்றும் இருமலையே கொரோணா அறிகுறிக்கான முக்கிய அறிகுறிகளாக கருதுவதாகவும் ,ஆனால் வாசனை மற்றும் ருசி அறியும் தன்மையை இழப்பதையே பிரதான‌ அறிகுறியாக எடுத்துக்கொள்ள வேண்டும் என்றும் அவர் கூறியுள்ளார்.