ஒரே நேரத்தில் பாகிஸ்தான் , சீனாவுடன் யுத்தம் ஏற்பட்டாலும் இந்திய விமானப்படை எதிர்கொள்ளும் என்றும் தளபதி பதோரியா தெரிவித்துள்ளார்.

டெல்லியில் செய்தியாளர்களிடம் பேசிய அவர் எல்லையில் ஏற்பட்டுள்ள அச்சுறுத்தலை அடுத்து நமது படைகளும் எந்த நிலையும் எதிர்கொள்ள தயார் நிலைக்கு வந்துள்ளன என்றார். தாக்கும் திறனில் இந்திய விமானப்படை தான் மிகச் சிறந்தது என்றும் அவர் கூறினார். ரஃபேல் விமானங்கள் ,சினூக், அப்பாச்சி ஹெலிகாப்டர்கள் என இயங்கும் விதத்தில் இந்திய விமானப்படை வலிமை பெற்றுள்ளதாகவும் அடுத்த மூன்று ஆண்டுகளில் இந்த வலிமை மேலும் அதிகரிக்கும் என்று அவர் கூறினார்.

மன படையின் தாக்கும் திறனை அதிகரிப்பது , நவீனப்படுத்துவது உள்நாட்டு தொழில்நுட்பத்தில் தன்னிறைவு அடைவதே இலக்கு என்றும் அவர் தெரிவித்தார். அடுத்த 5 ஆண்டுகளில் 83 இலகு ரக போர் விமானங்கள் 40 இலகு ரக ஹெலிகாப்டர் களையும் படையில் இணைக்க உள்ளதாகவும் அவர் கூறினார்.