அண்ணன் தம்பிக்குள் பேச்சுவார்த்தை நடைபெற்றுக் கொண்டு தான் இருக்கும் என மீன்வளத்துறை அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்துள்ளார்.

சென்னையில் செய்தியாளர்களிடம் பேசிய அவர் ஒருமித்த கருத்து விரைவில் எட்டும் என கூறினார். அவர் பேசியதாவது நாங்கள் எப்போதும் ராகு காலம் எமகண்டம் எல்லாம் உங்களுக்கு இருக்கலாம் ஆனால் எங்களுக்கு கிடையாது.

ஆல் டேஸ் ஆர் கோல்டன் டேஸ் கடவுளினுடைய படைப்பில் எல்லா நாட்களும் இனிய நாட்கள் தான் என்றும் ஒருமித்த கருத்து விரைவில் எட்டும் என்றும் அண்ணன் தம்பிகள் பேச்சுவார்த்தை நடத்தி முடித்து மீண்டும் அம்மாவின் ஆசி பெற்று ஆட்சியில் அதிமுக அமரும் என தெரிவித்தார்.