கடலூர் மாவட்டம் தூக்கணாம்பாக்கம் பகுதியில் மழைநீர் வெளியேற முடியாததால் அறுவடைக்கு தயாரான பல ஏக்கர் நெற்பயிர் மழை நீரில் மூழ்கி முளைக்கத் தொடங்கி உள்ளதாக விவசாயிகள் கண்ணீர் வடிக்கின்றனர். ஏக்கருக்கு 30 ஆயிரத்திற்கும் மேலாக செலவு செய்த நிலையில் தற்போது நெல்மணிகள் முளைக்க தொடங்கியுள்ளதால் பெரும் நஷ்டம் ஏற்பட்டுள்ளதாக விவசாயிகள் வேதனை தெரிவிக்கின்றனர்.

இதற்கு மழைநீர் வடிகால் வாய்க்கால்கள் முறையாக தூர்வாரப்படாததே காரணமென கூறும் விவசாயிகள். நிலையங்களை ஆய்வு செய்து உரிய இழப்பீடு வழங்க வேண்டும் என கோரிக்கை விடுக்கின்றனர். திருவாரூர் மாவட்டத்தில் இன்று முதல் நேரடி நெல் கொள்முதல் நிலையங்கள் திறக்கப்பட்டுள்ளன. கடந்த சில நாட்களாக டெல்டா மாவட்டங்களில் பெய்து வந்த மழையின் காரணமாக நெல்மணிகள் மழையில் நனைந்து முளைக்கத் தொடங்கி உள்ளதால் விவசாயிகள் கவலை அடைந்துள்ளனர்.

இதையடுத்து நெல் கொள்முதல் நிலையங்களை திறக்க உணவுத்துறை அமைச்சர் காமராஜ் உத்தரவிட்டிருந்தார். அதன்படி இன்று முதல் திருவாரூர் மாவட்டத்தில் 189 நேரடி நெல் கொள்முதல் நிலையங்கள் திறக்கப்பட்டுள்ளன. சன் நகர நெல் குவிண்டால் ஒன்றுக்கு 70 ரூபாய் ஊக்கத்தொகை சேர்த்து 1958 ரூபாய்க்கும், பொது ரக நெல் 50 ரூபாய் ஊக்கத்தொகை சேர்த்து 1918 ரூபாய்க்கும் கொள்முதல் செய்யப்பட்டுவருகிறது. இந்நிலையில் நெல் மணிகளின் ஈரப்பதத்தை கணக்கிடாமல் கொள்முதல் செய்ய வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.