பிரதமர் நரேந்திர மோடி சர்வாதிகார ஆட்சியை நடத்தி வருவதாக புதுச்சேரி முதல்வர் நாராயணசாமி குற்றம் சாட்டியுள்ளார். உத்தரபிரதேசத்தில் ராகுல் காந்தி மற்றும் பிரியங்க காந்தி கைது செய்யப்பட்ட சம்பவத்தை கண்டித்து புதுச்சேரி மாநில காங்கிரஸ் கட்சி சார்பில் உண்ணாவிரத போராட்டம் நடத்தப்பட்டது. இதில் அம்மாநில முதலமைச்சர் நாராயணசாமி அமைச்சர்கள் நமசிவாயம் மற்றும் சட்டமன்ற உறுப்பினர்கள் உட்பட காங்கிரஸ் கட்சியினர் கலந்து கொண்டனர்.

உத்தர பிரதேசத்தில் பட்டியலின பெண்மீதான குற்ற சம்பவத்தில் ஈடுபட்டவர்கள் மீது சிபிஐ விசாரணை நடத்தி கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என தெரிவித்த முதல்வர் நாராயணசாமி உத்திரப்பிரதேச மாநில முதல்வரை பதவி நீக்கம் செய்திட வேண்டும் எனவும் வலியுறுத்தினார்.

இது குறித்த அவர் பேசியபோது, தலைவர் ராகுல் காந்தி அவர்கள் பிரியங்க காந்தி அம்மையார் அவர்கள் காங்கிரஸ் கட்சியினுடைய தலைவர்கள் எல்லாம் காவல்துறை அமைப்பு காட்டுமிராண்டித்தனமாக அவர்களையெல்லாம் அடித்திருக்கிறது. அதற்கு அதை நாங்கள் கண்டித்தும் யோகி ஆதித்தனார் அரசு உடனடியாக பதவி நீக்கம் செய்யப்பட வேண்டும் என்றும் அதற்காக நாங்கள் இன்று இங்கே உண்ணாவிரதம் இருக்கின்றோம் என்றும் அவர் கூறினார்.