நடிகை காஜல் அகர்வாலுக்கு இம்மாதம் 30ஆம் தேதி திருமணம் நடைபெற உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.

துப்பாக்கி, மெர்சல், விவேகம், கோமாளி உள்ளிட்ட ஏராளமான தமிழ் படங்களில் நடித்துள்ளவர் நடிகை காஜல் அகர்வால். தற்போது இந்தியன் 2 படத்திலும் நடித்து வருகிறார்.

இந்நிலையில் அவருக்கு கௌதம் கிச்லு என்பவருடன் மும்பையில் அக்டோபர் 30-ஆம் தேதி திருமணம் நடக்க உள்ளதாக ட்விட்டரில் பதிவிட்டுள்ளார். மேலும் மக்களை மகிழ்விக்க தொடர்ந்து படங்களில் நடிப்பேன் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.