சேலத்தில் நேற்று இரவு பெய்த கன மழையால் திருமணிமுத்தாற்றில் சாயக்கழிவு நுரை பொங்கி வருகிறது. சேலம் மாவட்டங்களில் கடந்த சில நாட்களாக பரவலாக இரவு நேரங்களில் மழை பெய்து வருகிறது. குறிப்பாக நேற்று இரவு சேலத்தில் கனமழை பெய்தது. இதனையடுத்து திருமணிமுத்தாறில் ஆத்துக்காடு, பூலாவரி, உத்தமசோழபுரம் உள்ளிட்ட பகுதி வழியாக செல்லும் திருமணிமுத்தாறு நுரை பொங்கி சாயக் கழிவுகள் கலந்துள்ளது.

வீடுகளில் இருந்து வரும் கழிவு நீர் மற்றும் பல்வேறு சாயப்பட்டறைகள் மற்றும் சாய ஆலைகள் இது மட்டுமில்லாமல் பல்வேறு தொழிற்சாலைகளில் இருந்து வரும் கழிவுகள் அனைத்தும் திருமணி முத்தாற்றில்தான் சாக்கடையாக கலந்து கழிவு நீர் திறந்து விடப்படுகிறது. இதன் காரணமாக அதிகபட்சமாக மழை பெய்யும் நேரத்தில் இதுபோல் கழிவு நிதிகளை திறந்து விட்டு விடுகிறார்கள்.

இது தொடர்கதையாகவே தொடர்ந்து நடந்துவரும் சம்பவமாகவே அப்பகுதியில் பாதிக்கப்படுகிறது. கடந்த பல ஆண்டுகளாக நீடித்து வரும் இந்த பிரச்சனை குறித்து மாசு கட்டுப்பாட்டு வாரியத்தில் புகார் தெரிவித்திருந்தார்கள். இதுவரைக்கும் நிரந்தர தீர்வு காண எந்தவித நடவடிக்கையும் எடுக்காத காரணத்தினால், மழை வருகின்ற நேரத்தில் இதுபோன்ற சூழல் ஏற்படுகின்றது.