துணை முதலமைச்சர் ஓ பன்னீர்செல்வத்தை அதிமுக எம்பி தம்பிதுரை சந்தித்து பேச்சுவார்த்தை நடத்துகின்றார்.

சென்னை கிரீன்வேஸ் சாலையில் உள்ள வீட்டில் ஓ.பி.எஸ். ஐ சந்தித்து தம்பிதுரை ஆலோசனையில் ஈடுபட்டு இருப்பதாக தகவல் வெளியாகி இருக்கிறது. அதிமுக செயற்குழு கூட்டத்திற்கு பின்னர் தொடர்ந்து ஆலோசனையில் ஈடுபட்டு வருகின்றார்.

இதற்கு முன்பாக அதிமுகவினுடைய பல்வேறு முக்கிய தலைவர்களோடு சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தினார். அதிமுகவினுடைய துணை ஒருங்கிணைப்பாளர் கேபி முனுசாமி சந்தித்து பேச்சுவார்த்தை நடத்த இருப்பதாக தகவல்கள் வெளியாகி இருக்கிறது. இவரை தொடர்ந்து தம்பித்துரை அவர்களும் ஓபிஎஸ்யை நேரில் சந்தித்து பேசியுள்ளார்.