உள் நோக்கத்துடன் பொய்யான குற்றச்சாட்டை உரிய பாலிவுட் நடிகை பயல் கோட்ஷ் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என இயக்குனர் அனுரக் கஷ்யப் காவல்துறையினரிடம் புகார் அளித்துள்ளதாக அவரது வழக்கறிஞர் பிரியங்கா தெரிவித்துள்ளார்.

இந்தி திரையுலகின் பிரபல இயக்குனரான அனுராக் கஷ்யப் மீது பாலிவுட் நடிகை பாயல் கோஸ் பாலியல் புகார் அளித்திருந்தார். இதனையடுத்து அனுராக் காஷ்யப் மீது முதல் தகவல் அறிக்கையை பதிவு செய்த காவல்துறையினர் புகார் தொடர்பாக 8 மணி நேரம் விசாரணை மேற்கொண்டனர்.

இந்நிலையில் தன் மீது எந்த தவறும் இல்லை என்றும் உள் நோக்கத்துடன் பொய்யான குற்றச்சாட்டை கூறிய நடிகை பாயல் கோஷ் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் விசாரணையின்போது போலீசாரிடம் கஷ்யப் வலியுறுத்தியதாக வழக்கறிஞர் பிரியங்கா தெரிவித்துள்ளார். பாயல் கோஷின் குற்றச்சாட்டை முற்றிலும் மறுத்ததாகவும் நீதி கிடைக்கும் என அவர் நம்புவதாகவும் வழக்கறிஞர் பிரியங்கா தெரிவித்துள்ளார்.