இறைச்சிக்கு மாடுகளை வெட்ட தடை விதிக்கும் பரிந்துரைக்கு இலங்கை அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது.

இலங்கையில் விவசாய தேவைக்காக கால்நடைகளை பாதுகாக்கும் பொருட்டு இறைச்சிக்காக மாடுகளை வெட்ட தடை விதிக்க வேண்டும் என பிரதமர் மஹிந்த்ர ராஜபக்சே பரிந்துரை செய்தார்.

இதை ஆளும் இலங்கை பொதுஜன பெரமுன கட்சியின் நாடாளுமன்ற குழு கடந்த 8ம் தேதி ஏற்றது. இதை தொடர்ந்து மாடுகளை வெட்ட தடை விதிக்கும் பரிந்துரைக்கு அந்நாட்டு அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது. அதேநேரம் மாட்டிறைச்சி சாப்பிடுபவர்களுக்காக வெளிநாடுகளிலிருந்து இறக்குமதி செய்ய இலங்கை அரசு முடிவு செய்துள்ளது.