தமிழகத்தில் கொரோனாவால் தொற்றால் இறந்தவர்களின் விகிதம் 1.03% ஆக குறைந்துள்ளதாக சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் தெரிவித்துள்ளார். இந்தியன் கிங்ஸ் கொரோணா மருத்துவமனையில் ஆய்வு செய்த பிறகு விஜயபாஸ்கர் செய்தியாளர்களை சந்தித்தார்.

அப்போது பேசிய அவர் நாட்டிலேயே கிங் வளாகத்தில் தான் நான்கரை லட்சம் ஐசிடி ஆர் பரிசோதனை மேற்கொள்ளப்பட்டதாக கூறினார். நாள் ஒன்றிற்கு ஐந்தாயிரம் சோதனைகளை மேற்கொள்ளக் கூடிய வசதி இந்த உள்ளதாகவும் அவர் கூறினார்.

கொரோனா பரவலை தடுக்க மாஸ்க் என்ற மகத்தான ஆயுதம் உள்ளதாக கூறிய அமைச்சர் விஜயபாஸ்கர். மாஸ் பயன்படுத்தினால் நிச்சயம் தொற்றைக் குறைக்க முடியும் என்றார். கோவிட் ஊசியையை பரிசோதனைகளுக்கு எடுத்துக் கொண்டவர்களுக்கு

எந்தவித பக்கவிளைவும் இல்லை என்று கூறிய விஜயபாஸ்கர், அதேநேரம் தடுப்பு ஊசியை மட்டுமே நம்பி இல்லாமல் பொதுமக்கள் விழிப்புடன் இருக்க வேண்டும் என்றார். மேலும் பேசிய அவர் இறப்பு விகிதம் 1.6% இருந்து 1.3 சதவீதமாக குறைந்துள்ளதாகவும் அவர் கூறினார்.