Friday, October 2, 2020

காந்தியின் பிறந்தநாளையொட்டி தலைவர்கள் மரியாதை செய்தனர்



மகாத்மா காந்தியின் பிறந்தநாளையொட்டி அவரது நினைவிடத்தில் குடியரசுத் தலைவர் , பிரதமர் உள்ளிட்ட தலைவர்கள் மரியாதை செலுத்தினர். டெல்லி ராஜ்காட்டில் உள்ள காந்தியின் நினைவிடத்தில் குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் மற்றும் பிரதமர் நரேந்திர மோடி மலர் தூவி மரியாதை செலுத்தினர். காந்தி ஜெயந்தியன்று வழக்கமாக ராஜ்காட்டில் நடத்தப்படும் சிறப்பு நிகழ்ச்சிகள் கொரோணா தொற்று காரணமாக ரத்து செய்யப்பட்டுள்ளன.

காந்தியின் பிறந்த நாளையொட்டி குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் வெளியிட்டுள்ள வாழ்த்துச் செய்தியில் காந்திய சிந்தனைகள் உலக நலனுக்கான பாதையை அமைக்கிறது என்றும் மகாத்மா காந்தி மனிதகுலத்திற்கு உத்வேகமளிப்பவர் என்றும் குறிப்பிட்டுள்ளார். பிளேக் நோய் பரவிய போது மகாத்மா காந்தி தன்னலமில்லாமல் சேவையாற்றினார் என்றும் சுட்டிக்காட்டியுள்ளார். இதேபோல் காந்தியின் வாழ்க்கை முன்னத எண்ணங்களில் இருந்து கற்றுக் கொள்ள நிறைய இருக்கிறது என பிரதமர் நரேந்திர மோடி புகழாரம் சூட்டியுள்ளார்.

மகாத்மா காந்தி பிறந்த நாளையொட்டி ட்விட்டரில் பதிவிட்டுள்ள அவர் நேசத்திற்குரிய மகாத்மா காந்தியை தலை வணங்கும் எனக் குறிப்பிட்டுள்ளார். வளமான மற்றும் கனிவான இந்தியாவை உருவாக்க காந்தியின் கொள்கைகள் வழிகாட்டுவதாகவும் பிரதமர் மோடி தெரிவித்துள்ளார். தேச பிதாவின் பிறந்தநாளையொட்டி அவரது பொன்மொழிகளை நினைவு கூர்ந்துள்ளார் காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி.

உலகில் யாருக்கும் அஞ்ச மாட்டேன் யாருடைய அநீதிக்கும் தலை வணங்க மாட்டேன் பொய்யை உண்மையுடன் வெல்வேன் கையை எதிர்க்கும் போது எல்லா துன்பங்களையும் தாங்கிக்கொள்ள முடியும் என்ற காந்தியின் மொழிகளை ராகுல் காந்தி தனது டுவிட்டரில் பதிவிட்டுள்ளார். தேச பிதா மகன் பிறந்தநாளையொட்டி ஆளுநர் பன்வாரிலால், முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி மற்றும் துணை முதல்வர் ஓ பன்னீர்செல்வம் உள்ளிட்டோர் அவரது உருவ படத்திற்கு மரியாதை செலுத்தினர். காமராஜர் சாலையில் உள்ள காந்தி சிலையின் கீழே வைக்கப்பட்டுள்ள அவரது திருஉருவப் படத்திற்கு மலர் தூவி மரியாதை செலுத்தினர். காந்தியின் கொள்கைகளை நினைவு கூறும் விதமாக ராட்டையில் நூல் நூற்றல் போன்ற நிகழ்வுகளும் ஒருங்கிணைக்கப்பட்டு இருந்தன.

No comments:

Post a Comment

Pages