சென்னை மாநகராட்சி சார்பில் செயல்திறன் அளவீட்டு முறையில் திடக்கழிவு மேலாண்மை திட்டம் செயல்பாட்டுக்கு வந்தது. சென்னை மாநகரை சுத்தமாக வைத்திருக்க வேண்டும் என்பதே இவர்களின் தலையாய நோக்கம். இதற்காக தனியார் நிறுவனத்துடன் இணைந்து சென்னை மாநகராட்சியில் செயல்திறன் அளவிட்டு முறையிலான திடக்கழிவு மேலாண்மை தொடங்கப்பட்டுள்ளது. தெருமுனையில் இருந்த பச்சை நிறத்திலான உப்பை தொட்டிகள் அகற்றப்பட்டு பச்சை, நீலம் ,சிவப்பு நிறங்களில் புதிய பெட்டிகள் வைக்கப்பட்டுள்ளன.

பணியாளர்கள் காலை 6 மணி முதல் மதியம் 2 மணி வரை குடியிருப்புகளுக்கு நேரடியாகச் சென்றும் மதியம் வணிக வளாகங்கள் ,கடைகள், நிறுவனங்கள் உள்ள பகுதிகளுக்குச் சென்றும் குப்பைகளை சேகரிப்பார்கள். இரண்டு தனித்தனியான குப்பைகளை அள்ளுவதற்கு மெஷின்கள் உள்ளது எனவும், பொதுமக்கள் நிறுவன ஊழியர்கள் வீட்டில் இருந்தும், நிறுவனத்தில் இருந்தும் பி களை கொடுக்கும்போதே தனித்தனியாக ரகம் பிரித்து கொடுத்தால் இவன் வேலை எளிதானதாகும். திடக்கழிவுகளை வீடுகளுக்குச் சென்று சேகரிக்கும் பணிக்காக இ-ரிக்ஷாக்களும் பயன்படுத்தப்படுகின்றன.

வீடு வீடாகச் சென்று பெறப்படும் குப்பையை ஆங்காங்கே தெருமுனைகளில் வைக்கப்பட்டிருக்கும் குப்பை தொட்டியில் போடுவார்கள். இரவு நேரங்களில் அந்த குப்பைகள் மாநகராட்சி சார்பாக வந்து எடுத்துச் செல்லப்படும். இதில் அபாயகரமான குப்பைகள் மண்டல அலுவலகங்களில் ஒப்படைக்கப்படும். இதில் விருப்பம் உள்ள தன்னார்வலர்கள் இணைந்து பணியாற்றலாம் என தனியார் நிறுவன அதிகாரி கூறுகிறார்.