அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்பிற்கு கொரோனா தொற்று உறுதி செய்திருக்கும் நிலையில் அவருக்கு சிகிச்சை அளிக்கும் மருத்துவர்கள் கூறியதாவது டிரம்ப்பினுடைய வயது 74 இது மிகவும் கவனிக்கப்பட வேண்டிய ஒன்று.

ஏனென்றால் அமெரிக்காவில் பாதிக்கப்பட்டு உயிரிழந்தவர்களில் பத்தில் எட்டு பேர் 65 வயதை தாண்டியவர்கள் ஆவார்கள் என புள்ளி விவரங்கள் தெரிவிக்கின்றது. அவருடைய வயது 74 என்பதால் அவர் தற்போது ஹை ரிஸ்கில் வைக்கப்பட்டுள்ளார்.

அவரது உயரம் 6 அடி 3 இன்ச் அவருடைய எடை 110.7 கிலோவாக உள்ளது. இந்த உயரத்திற்கு இந்த எடை என்பது சற்றே அதிகம் என கூறுகிறது மருத்துவ குழு. அதிபர் டிரம்ப் உடல் பருமன் கொண்டவர்கள் என்று மருத்துவ நிர்வாகம் தெரிவித்திருக்கிறது.