ஐ.ஏ.எஸ் ஐ.பி.எஸ் உள்ளிட்ட பதவிகளுக்கான சிவில் சர்வீசஸ் முதல் நிலை தேர்வு தொடங்கி நடைபெற்று வருகிறது. ஐ.ஏ.எஸ் ஐ.பி.எஸ் ஐ.எஃப்.எஸ் உள்ளிட்ட பதவியில் உள்ள காலி இடங்களை நிரப்புவதற்கான சிவில் சர்வீசஸ் முதல் நிலை தேர்வு நாடு முழுவதும் நடைபெற்று கொண்டிருக்கின்றது.

நாடு முழுவதும் 2569 தேர்வு மையங்களில் நடைபெற்றுக் கொண்டிருக்கின்ற தேர்வை 10 லட்சத்து 58 ஆயிரம் மாணவர்கள் எழுதி வருகின்றனர். தமிழ்நாட்டை பொறுத்தவரையில் சென்னை, கோவை, மதுரை மற்றும் திருச்சி ஆகிய நகரங்களில் தேர்தல் நடைபெற்றுக் கொண்டிருக்கின்றது. சென்னையை பொருத்தவரை 62 இடங்களில் தேர்வு நடைபெற்றுக் கொண்டிருக்கின்றது. தமிழகம் முழுவதும் 50 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மாணவர்கள் சிவில் சர்வீசஸ் முதல் நிலை தேர்வு எழுதி வருகின்றனர்.

தேர்தவானது சரியாக ஒன்பது முப்பது மணிக்கு தொடங்கியது. அதற்கு முன்பாக 9.20 தேர்வு எழுதுபவர்கள் தேர்வு எழுதும் அறையில் அனுமதிக்கப்பட்டனர். வெப்பநிலை பரிசோதனை மேற்கொள்ளப்பட்ட பிறகே மாணவர்கள் தேர்வு மையங்களுக்குள் அனுமதிக்கப்பட்டுள்ளனர். அதுமட்டுமில்லாமல் முகக் கவசம் அணிதல் மற்றும் தனிமனித இடைவெளியை பின்பற்றி தேர்வு மையத்திற்குள் மாணவர்கள் அமர வைக்கப்பட்டு இருக்கின்றனர்.