பள்ளிகளை திறப்பதற்கான நேரம் இதுவல்ல என்றும் பள்ளி திறப்பை விட மாணவர்களின் உயிர்தான் முக்கியம் என்றும் அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்துள்ளார்.style="display:block"
data-ad-client="ca-pub-8115628500823900"
data-ad-slot="1986236643"
data-ad-format="auto"
data-full-width-responsive="true">
சென்னை கோட்டூர்புரம் அண்ணா நூற்றாண்டு நூலகத்தில் அனைத்து மாவட்ட முதன்மை கல்வி அலுவலர்களுக்கான ஆய்வுக் கூட்டம் அமைச்சர் செங்கோட்டையன் தலைமையில் நடைபெற்றது. கூட்டத்திற்கு பின் செய்தியாளர்களிடம் பேசிய அவர் பள்ளிகள் திறப்பு தொடர்பாக சுகாதாரத்துறை கல்வித் துறை வருவாய் துறையுடன்

ஆலோசித்தபின் முதலமைச்சர் முடிவெடுப்பார் என்றும் தெரிவித்தார். இது குறித்து அவர் பேசியதாவது,பள்ளிகள் திறப்பை விட மாணவர்களின் உயிரே முக்கியம் என்றும் மற்ற எந்த மாநிலங்களிலும் பள்ளிகள் இதுவரை திறக்கப்படவில்லை என்றும் தங்களுக்குத் தெரியாதது ஒன்றுமில்லை என்றும் அவர் தெரிவித்தார்.