Tuesday, October 6, 2020

சாதிமறுப்பு காதல் திருமணம் செய்த கள்ளக்குறிச்சி எம்எல்ஏ



கள்ளக்குறிச்சி தனித் தொகுதி அதிமுக எம்எல்ஏ பிரபு சாதி மறுப்பு திருமணம் செய்துகொண்டார். கள்ளக்குறிச்சி தொகுதி சட்டப்பேரவை உறுப்பினர் பிரபுவுக்கும், தியாகத் துருவத்தை சேர்ந்த மலை அம்மன் கோவிலில் அர்ச்சகராக உள்ள சாமிநாதன்-மாலா தம்பதியினர் மகள் சௌந்தர்யாவுக்கும் இன்று காலையில் திருமணம் நடைபெற்றது.

சௌந்தர்யா இரண்டாமாண்டு பி.ஏ ஆங்கிலம் பயின்று வருவதாக கூறப்படுகிறது. இந்நிலையில் தமது மகளை அதிமுக எம்.எல்.ஏ பிரபு கடத்தி சென்று திருமணம் செய்து கொண்டதாக சௌந்தர்யாவின் தந்தை புகார் தெரிவித்தார்.

மேலும் அவர் எம்.எல்.ஏ வீட்டின் முன்பு தீக்குளிக்கவும் முயன்றார். தியாகதுருகம் காவல்துறையினர் அவரை பாதுகாப்பாக மீட்டனர்.

No comments:

Post a Comment

Pages