
சிசிடிவி கேமரா காட்சி மூலம் ஆய்வு செய்த தெர்மல் நகர் போலீசார் தச்சநல்லூர் பாலகிருஷ்ணன், நியூ காலனி சக்தி கணேசன் இருவரையும் பிடித்தனர். பஜாஜ் நிறுவனத்தில் வேலை செய்த சக்தி கணேஷ் மோட்டார் சைக்கிள்களை எப்படி திருடுகிறார் என்பதை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஜெயக்குமார் முன்னிலையில் தத்ரூபமாக நடித்துக் காட்டினார்.
அதைப்பார்த்த அங்கிருந்த காவலர்கள் அதிர்ந்து போயினர். பின்பு அவர் மீது வழக்கு விசாரணை செய்யப்பட்டு காவல்துறை விசாரித்து வருகிறது.
No comments:
Post a Comment