உத்திரபிரதேசத்தில் கூட்டு பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கப்பட்டதால் உயிரிழந்த பெண் குடும்பத்திற்கு ஆறுதல் கூறச் சென்ற காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி , பிரியா காந்தி கைதுசெய்யப்பட்டுள்ளனர்.

இந்நிலையில் அவர்களது கைது நடவடிக்கைக்கு காங்கிரஸ் செய்தி தொடர்பாளரும், நடிகையுமான குஷ்பு கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். இது குறித்து ட்விட்டரில் கருத்து தெரிவித்திருக்கும் குஷ்பு மனிதராக இருப்பதற்கே உத்தரப்பிரதேச முதல்வருக்கு யோகி ஆதித்யநாத் தகுதியில்லாதவர் என்று சாடியிருக்கிறார்.

ராகுல் காந்தியை கைது செய்தது வெட்கக்கேடானது என்று குஷ்பு விமர்சனம் செய்திருக்கிறார். பாரதிய ஜனதாவில் இணைவதற்கு குஷ்பு திட்டமிட்டுருப்பதாக தகவல்கள் வெளியாகி வந்த நிலையில் தற்போது அவர் யோகி ஆதித்யநாத் திற்கு எதிராக கருத்து பதிவிட்டு இருப்பது முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகிறது.