ஆந்திர மாநிலம் கர்னூல் மாவட்டத்தில் பழங்காலத்தைச் சேர்ந்த 15 தங்க நாணயங்கள் 18 வெள்ளி நாணயங்கள் கண்டெடுக்கப்பட்டுள்ளன.

அங்குள்ள சைலம் கோவில் அருகே உள்ள பழமையான கண்டா மண்டபம் பழுதடைந்ததைத் தொடர்ந்து அதனை எடுக்கும் பணிகள் நடைபெற்றன.

அப்போது மண்டபத்திற்குள் இருந்த தண்ணீர் தொட்டியில் 15 தங்க நாணயங்கள் , 18 வெள்ளி நாணயங்கள் மற்றும் ஒரு தங்க மோதிரம் இருந்ததையடுத்து போலீசார் மற்றும் வருவாய்த் துறையினர் அதனைப் பார்வையிட்டு பரிசோதனை செய்து வருகின்றனர்.