புகழ்ச்சியை மட்டுமே பார்த்த ரஜினிகாந்த்தினால் அரசியலில் அவச்சொறாகளையும் அவமானங்களையும் தாங்க முடியாது என்று நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் தெரிவித்துள்ளார்.நாம் தமிழர் கட்சியின் சுற்றுச்சூழல் பாசறை சார்பில் சென்னை அருகே சென்னை அருகே அம்பத்தூரில் சதாக்குளத்தில் பனை நடும் விழா நடைபெற்றது.

இதில் பங்கேற்ற சீமான் பனை விதைகளை விதைத்தார். பின்னர் செய்தியாளர்களின் மத்தியில் பேசிய அவர் அரசியல் என்னும் ஆபத்தான விளையாட்டில் நடிகர் ரஜினிகாந்த் இறங்க வேண்டாம் என்று கேட்டுக்கொண்டார். இல்லையெனில் அவரை இந்த விளையாட்டில் இறக்கிவிட்டவர்களே வசைபாடுவார்கள் என்றும் சீமான் கூறினார். வேறு ஒருவரை முதல்வராக அறிவிப்பேன் என சொன்ன நாளிலேயே ரஜினிகாந்துக்கும் தங்களுக்குமான முரண்பாடு நீங்கியதாக சீமான் குறிப்பிட்டார்.

அவர் கூறியதாவது அவர் வயதில் என்னைவிடப் பெரியவர் சினிமாவில் மிகப்பெரிய கலைஞர் ஆனால் இந்த இடத்தில் கமல் மற்றும் ரஜினி விட நான் மூத்தவன் என்றும், அதனால் நான் அவர்களிடம் கூறுகிறேன் இந்த ஆட்டம் மிகவும் ஆபத்தானதுநீங்கள் பார்க்கின்றீர்கள் ஆனால் இந்த வயசில் என் அளவிற்கு அவமானங்களும் அமைச்சர்களையும் தாங்கியவர்கள் இங்கே யாரும் இருக்க முடியாது எனவும் அவர் கூறினார். அதனால் அவர் அதை தாங்க மாட்டார், புகழ்ச்சியை மட்டுமே பார்த்தவரவர் என்றும் அவர் கூறினார்.