கொரோனா பாதிப்பு சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்ட தேமுதிக தலைவர் விஜயகாந்த் மற்றும் அவரது மனைவி பிரேமலதா விஜயகாந்த் ஆகியோர் மருத்துவமனையில் இருந்து வீடு திரும்பினர்.

கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டிருந்த தேமுதிக தலைவர் விஜயகாந்த் கடந்த மாதம் 24 ஆம் தேதி சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.

அவரது மனைவிக்கும் தொற்று பாதிப்பு இருந்ததை அடுத்து அவரும் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். உடல்நிலையில் நல்ல முன்னேற்றம் ஏற்பட்டதையடுத்து தேமுதிக தலைவர் விஜயகாந்தும் அவரது மனைவி பிரேமலதாவும் மருத்துவமனையில் இருந்து டிஸ்சார்ஜ் செய்யப்பட்டு வீடு திரும்பினர்.