ஜிஎஸ்டி இழப்பீட்டை ஈடு செய்வது குறித்து ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டத்தில் வாக்கெடுப்பு நடத்த ஆக்கப்பூர்வமாக பதிவுத்துறை வேண்டும் என்று திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் வலியுறுத்தியிருக்கிறார். வசூலிக்கப்பட்ட ஈடு செய்தல் நிதியை மாநிலங்களுக்கு வழங்காமல் இந்திய தொகுப்பு நிதியில் வைத்துக் கொண்டு 42 ஆயிரத்து 272 கோடி ரூபாயை வேறு செலவுகளுக்கு மத்திய அரசு பயன்படுத்திக் கொண்டதாக சிஏஜி அமைப்பே பகிரங்கமாக குற்றம் சாட்டியதாக ஸ்டாலின் தனது அறிக்கையில் சுட்டிக்காட்டியுள்ளார்.

மாநிலங்கள் வேண்டுமானால் சந்தையில் கடன் வாங்கிக் கொள்ளலாம் என கூறியிருப்பது மாநிலங்களின் நிதி தன்னாட்சி உரிமையை பாதிக்கும் என அவர் குறிப்பிட்டு இருக்கிறார். ஆகஸ்ட் மாத ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டத்தில் அறிவிக்கப்பட்ட போதே அமைச்சர் ஜெயக்குமார் அதை எதிர்த்து வாக்கெடுப்பு நடத்த வலியுறுத்தியிருக்க வேண்டும் என மு.க ஸ்டாலின் சாடி இருக்கிறார்.

எனவே நாளை நடைபெற உள்ள ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டத்தில் ஜிஎஸ்டி இழப்பீட்டை ஈடு செய்வது குறித்தும் , ஜிஎஸ்டி அமல்படுத்துவதால் ஏற்படும் வருவாய் இழப்பு ஐந்து ஆண்டுகளுக்கு ஈடு செய்யப்படும் என உத்தரவாதம் மீறப்பட்டிருப்பதாகவும் வாக்கெடுப்பு நடத்த வலியுறுத்த வேண்டுமென மு.க ஸ்டாலின் வலியுறுத்தி இருக்கிறார்.