கருத்து ஒருமித்த அடிப்படையில் வரும் 7-ம் தேதி அதிமுகவின் முதல்வர் வேட்பாளர் யார் என்ற கேள்விக்கு முற்றுப்புள்ளி கிடைக்கலாம் என மீன்வளத்துறை ஜெயக்குமார் தெரிவித்துள்ளார். வரும் ஆறாம் தேதி அனைத்து அமைச்சர்களையும் சென்னைக்கு வரும்படி அதிமுகவின் கட்சி தலைமை அலுவலகம் அறிவித்துள்ளது.

இதனடிப்படையில் மீன்வளத்துறை அமைச்சர் ஜெயக்குமார் அவர்களிடம் கேட்ட கேள்விக்கு, கட்சியினுடைய சட்டமன்ற உறுப்பினர்களை வர வைப்பதற்கும் , கட்சிக்காரர்களை வர வைப்பதற்கும் என்பது அன்றாடம் நடக்கக்கூடிய நிகழ்வு என்றும், இதில் பெரிய எந்த ஒரு நிகழ்வும் கிடையாது என்றும் ஆறாம் தேதி நடக்க கூடிய செயற்குழுவில் ஒட்டுமொத்தமாக கட்சியினுடைய எல்லாம் மூத்த தலைவர்களும் கலந்து பேசி 7ஆம்தேதி ஒரு நல்ல முடிவு அர்மின் இந்த அடிப்படையில் துணை ஒருங்கிணைப்பாளர் கட்சியின் கருத்தாக கூறியிருக்கிறார்.

எனவே ஏழாம் தேதி பொருத்தவரை காத்திருந்து பார்ப்போம் என்றும் அவர் கூறினார். ஏழாம் தேதி தான் முடிவு என்ன என்று தெரியும் பொழுது இதுதான் முடிவு என இப்போது நான் எவ்வாறு கூறமுடியும் என்றும் , கருத்து ஒருமித்த அடிப்படையில் இந்த பிரச்சனைக்கு ஒரு முற்றுப்புள்ளி கிடைக்கலாம் என அவர் தெரிவித்துள்ளார்.