சீனாவின் வுகானின் நகரில் இருந்து பரவிய கொரோனா நோய் பரவலால் உலக நாடுகள் பலவும் முடங்கி இருக்கும் சூழலில் சீன நாட்டில் விடுமுறை தினக் கொண்டாட்டம் களை கட்டியுள்ளது. சீன நாடு உதயமான அக்டோபர் ஒன்றாம் தேதி ஒவ்வொரு ஆண்டும் தேசிய தினமாகக் கொண்டாடப்படுவது வழக்கம். இதையட்டி அக்டோபர் ஒன்றாம் தேதியிலிருந்து எட்டு நாட்களுக்கு விடுமுறை விடப்படுவது உண்டு. மேலும் இந்த ஆண்டு இலையுதிர் காலத் திருவிழாவும் இணைந்து கொண்டாடப்படுகிறது .

அதனால் சீன மக்கள் தம் குடும்பத்துடன் சுற்றுலா சென்று விடுமுறை தினத்தை மகிழ்ச்சியுடன் கொண்டாடி வருகின்றனர். சீன தேசிய தின விடுமுறையையொட்டி புராதன நகரங்கள், சுற்றுலா பகுதிகள் அனைத்தும் களை கட்டியுள்ளன. இதனால் சாதாரண ரயில்கள் மற்றும் புல்லட் ரயில்களில் கூட்டம் மழை மோதுகிறது. ஒவ்வொரு ஆண்டும் விடுமுறை வாரத்தில் பொதுமக்கள் சிங்சியாங் மாகானத்திற்கு படையெடுப்பது உண்டு.

அதனால் சுற்றுலா பயணிகளை கவர சிங்சியாங் மாகாணத்தில் கண்கவர் நிகழ்ச்சிகளும் பாரம்பரிய விழாக்களும் நடைபெற்று வருகின்றன.சிங்சியான் மாகாணத்தின் தனித்துவமான கலாச்சாரம் , உணவுகள், நிலப்பரப்பு வசீகரிக்கும் இயற்கை அழகு ஆகியவை நாட்டின் பல்வேறு நகரங்களில் இருந்து சுற்றுலா பயணிகளை ஈர்த்துள்ளது. நீண்ட விடுமுறையை கழிக்க சீன மக்கள் தம் குடும்பத்துடன் பல்வேறு பகுதிகளுக்கும் பயணம் மேற்கொண்டுள்ளனர்.