மத்திய அரசின் வழிகாட்டுதல் மாநில சுகாதார குழுக்கள் அளித்துள்ள அறிக்கைகள் ஆகியவற்றை வைத்து ஆலோசித்து திரையரங்குகள் திறப்பது குறித்து முதலமைச்சர் நல்ல முடிவை அறிவிப்பார் என அமைச்சர் கடம்பூர் ராஜு தெரிவித்துள்ளார்.

அவர் கூறியதாவது திரையரங்குகளை பொருத்தவரை உள்ளே சென்றால் டிக்கெட் வாங்கியதும் முதலில் உள்ளே சென்று அமர்ந்து படத்தை திரையிட்ட பிறகு படத்தை பார்த்து படம் முடிந்து வெளியே வர வேண்டுமென்றால் குறைந்த பட்சம் மூன்று மணி நேரம் தேவைப்படும். மூன்று மணி நேரம் ஒரே அரங்கிற்குள் இருக்க வேண்டிய நிலை இருக்கின்றது.

இதையெல்லாம் கருத்தில் கொண்டு மத்திய அரசு என்ன வழிகாட்டுதல்கள் சொல்லி இருக்கிறதோ அதுமட்டுமில்லாமல் மத்திய சுகாதார குழு மற்றும் மாநில சுகாதாரத்துறை இவர்களெல்லாம் முதல்வருக்கு அறிக்கை விடுத்துள்ளார்கள். நேற்றைய தினம் கூட முதலமைச்சரிடம் கலந்து பேசினேன். அனைத்தையும் அவர் ஆலோசித்து கலந்து பேசி நல்ல முடிவை எடுப்பார் என அவர் தெரிவித்தார்.