கொரோனா ஊரடங்குக்குப்பின் புதுச்சேரி கடல் பிளாஸ்டிக் கழிவுகள் இன்றி தூய்மையாக காட்சியளிப்பதாக ஸ்கூபா டைவிங் பயிற்சியாளர் அரவிந்த் தெரிவித்துள்ளார்.

கொரோனா ஊரடங்குக்கு முன் தான் வாரந்தோறும் மாணவர்களுடன் இணைந்து ஆழ்கடலில் இருந்து 150 கிலோ பிளாஸ்டிக் கழிவுகளை அகற்றி வந்த இவர் ஆறுமாத ஊரடங்கு க்குப்பின் கடலுக்கு சென்ற போது

கடந்த பன்னிரண்டு ஆண்டுகளாக இல்லாத அளவிற்கு குப்பைகள் இன்றி கடல் நீல வண்ணத்தில் சுத்தமாக இருப்பதாக தெரிவித்துள்ளார்.