இந்திய கடற்படைக்கு சொந்தமான சிறிய ரக விமானம் கீழே விழுந்து விபத்தில் இரண்டு கடற்படை வீரர்கள் உயிரிழந்தனர்.

கேரள மாநிலம் கொச்சியில் உள்ள ஐஎன்எஸ் கருடா கடற்படை பயிற்சி தளத்தில் இன்று காலை இரண்டு கடற்படை வீரர்கள் சிறிய ரக விமானத்தில் வழக்கமான பயிற்சியில் ஈடுபட்டிருந்தனர்.

அப்போது தொப்பும்படி பாலத்தில் நடை பாலத்தில் திடீரென விமானம் கீழே விழுந்து நொறுங்கியது.

இதில் அந்த விமானத்தில் இருந்த கடற்படை வீரரான உத்ராஞ்சல் பகுதியைச் சேர்ந்த ராஜீவ் ஜா மற்றும் கடல் படை வீரரான சுனில் குமார் ஆகியோர் உயிரிழந்தனர். விபத்துக்கான காரணம் குறித்து விசாரணை நடைபெற்று வருகிறது.