பாலியல் வன்கொடுமை செய்து கொல்லப்பட்ட பெண்ணின் குடும்பத்திற்கு ஆறுதல் கூறச் சென்ற ராகுல் காந்தியை காவல்துறையினர் கையாண்ட விதம் மிகவும் கண்டிக்கத்தக்கது என மக்களவை உறுப்பினர் சு.வெங்கடேசன் தெரிவித்துள்ளார்.

அந்தப் பெண்ணினுடைய உடலைக் கூட உறவினர்களுக்கு கொடுக்க மறுத்து மிக மோசமான நிலையை உத்தரப்பிரதேச அரசு கையாண்டிருக்கிறது. இதற்கு எதிராக அந்த கிராமத்திற்கு செல்ல முனைந்த காங்கிரஸ் கட்சியினுடைய

தலைவர் நாடாளுமன்ற உறுப்பினர் ராகுல் காந்தி செல்ல முற்பட்ட போது காவல்துறை நடந்து கொண்ட விதம் மிகமிக கண்டனத்திற்குரியது. சட்ட தன்னுடைய ஆட்சி தான் இங்கே நடக்கிறதா என்று கேள்வியை எல்லோர் நெஞ்சுகளிலும் எழுப்புகிறது.