சென்னையில் புதிய புல்லட்டு வாகனங்களை குறிவைத்து திருடி பல்வேறு மாவட்டங்களில் விற்ற வந்த கும்பல் கைது செய்யப்பட்டுள்ளது. கடந்த மாதம் ஆறாம் தேதி எழும்பூர் தலைமை காவலர் குமரவேலின் புதிய புல்லட் வாகனம் திருடு போனது. நுங்கம்பாக்கம் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளிலும் புல்லட்டு வாகனங்கள் திருடு போவதாக புகார்கள் பதிவாகின.

குமரவேலின் புல்லட் திருடுபோன இடத்தில் இருந்த சிசிடிவி கேமராக்களை காவல் துறையினர் ஆய்வு செய்து பின் தொடர்ந்தனர். கல்பாக்கம் வழியே மரக்காணம் ,பூஞ்சேரி வரை புல்லட்டுகள் கொண்டு செல்ல பட்டிருந்தன. அப்பகுதியில் வாகன தணிக்கையை தீவிர படுத்திய காவல்துறையினர் வெள்ளியன்று அதிகாலை புல்லட்டில் வந்த ஒருவரிடம் விசாரித்தனர்.

அதில் தஞ்சையைச் சேர்ந்த சபி என்றவர் ஓராண்டாக சென்னையில் தங்கி 65 க்கும் அதிகமான புல்லட்டுகளை குறிவைத்து திருடி வந்ததாக ஒப்புக்கொண்டார். சிபி, அமீர்ஜான் என்ற கூட்டாளிகளையும் கைது செய்த தனிப்படையினர். ஏழு புல்லட் உள்ளிட்ட 10 இருசக்கர வாகனங்களை கைது செய்தனர்.