ஆந்திர மாநிலம் விஜயநகரம் மாவட்டத்தில் இரண்டு பள்ளிகளில் 27 மாணவர்களுக்கு கொரோனா தோற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

பெற்றோர்கள் அனுமதியுடன் இது வேறு பள்ளிகளில் நடந்த முறைசாரா வகுப்புகளில் மாணவர்கள் பங்கேற்ற நிலையில் அவர்களில் 9 மற்றும் பத்தாம் வகுப்புகளைச் சேர்ந்த 27 மாணவர்களுக்கு கொரோனா தொற்று கண்டறியப்பட்டுள்ளது.

வெவ்வேறு கிராமங்களைச் சேர்ந்த பாதிக்கப்பட்ட மாணவர்களுக்கு அறிகுறிகள் இல்லாத நிலையில் அவர்களுடன் தொடர்பில் இருந்த பெற்றோர்கள் , ஆசிரியர்களுக்கு கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டு வருவதாக சுகாதாரத்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.