நாட்டின் பாதுகாப்பை விட தங்களுக்கு மேலானது எதுவும் இல்லை என பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்திருக்கிறார். இமாச்சலபிரதேசமான மாநிலத்தின் மணாலியில் இருந்து லே நகருக்குச் செல்லும் நெடுஞ்சாலையில் கடல் மட்டத்தில் இருந்து 10,000 அடி உயரத்தில் சுரங்கப்பாதை அமைக்கப்பட்டு உள்ளது. 9 கிலோ மீட்டர் நீளத்தில் அமைக்கப்பட்டுள்ள சுரங்கப்பாதை உலகிலேயே நெடுஞ் சாலையில் அமைக்கப்பட்டுள்ள மிக நீளமான சுரங்கம் .

10 ஆண்டு உழைப்பில் கட்டி முடிக்கப்பட்ட சுரங்கப்பாதையை பிரதமர் நரேந்திர மோடி ரிப்பன் வெட்டி திறந்து வைத்தார். இந்த நிகழ்ச்சியில் அமைச்சர் ராஜ்நாத் சிங் ,இமாச்சல பிரதேச முதல்வரான ஜெயராம் தாகூர், முப்படை தலைமை தளபதி விபின் ராவத், ராணுவ தளபதி எம்.எம் நரவனே ஆகியோர் கலந்து கொண்டனர். முன்னதாக சுரங்கப் பாதையின் சிறப்பம்சங்களை பிரதமர் மோடி கேட்டறிந்தார். பாதையை திறந்து வைத்த பிறகு பிரதமர் மோடி திறந்த ஜீப்பில் சென்று சுரங்கப் பாதையை பார்வையிட்டார். பின்னர் பேசிய பிரதமர் மோடி இந்த சுரங்கப்பாதை இமாச்சலப் பிரதேச மலையை டெல்லியுடன் நெருக்கமாக கொண்டு வந்துள்ளது என்று கூறினார்.

நாட்டின் பாதுகாப்பை விட தங்களுக்கு மேலானது எதுவும் இல்லை என்று தெரிவித்த மோடி எல்லைப் பாதுகாப்பை வலுப்படுத்ததே அரசின் நோக்கம் என கூறினார். உள்கட்டமைப்பு திட்டங்களில் ஏற்படும் தாமதம் பொருளாதாரத்தை வலுவிழக்க வைக்கிறது என கூறிய மோடி சுயசார்பு இந்தியாவை அரசு வலுவாக கட்டமைத்துள்ளது என தெரிவித்தார். தட்டல் ரோட்டன் சுரங்கப்பாதையில் ஒவ்வொரு 60 மீட்டர் இடைவெளியிலும் தீயணைப்பு கருவிகள் 250 மீட்டர் இடைவெளியில் கண்காணிப்பு கேமராக்கள் அவசரகால வெளியேறும் வழி அமைக்கப்பட்டுள்ளது.