அக்டோபர் 6ம் தேதி அதிமுக எம்எல்ஏக்கள் அனைவரும் சென்னைக்கு வருமாறு அக்கட்சியின் தலைமை அழைப்பு விடுத்துள்ளது. கடந்த 28 ஆம் தேதி செயற்குழு கூட்டம் நடைபெற்றது.

அந்தக் கூட்டத்திற்கு பிறகு செய்தியாளர்களை சந்தித்த துணை ஒருங்கிணைப்பாளர் கேபி முனுசாமி வருகிற 7ஆம் தேதி எடப்பாடி பழனிச்சாமி மற்றும் ஓ பன்னீர்செல்வம் இணைந்து அதிமுகவின் முதல்வர் வேட்பாளர் யார் என்று அறிவிப்பார்கள் என்பதை தெரிவித்து இருந்தார்.

இந்நிலையில் அக்டோபர் 6ஆம் தேதி அதிமுக எம்எல்ஏக்கள் அனைவரும் சென்னைக்கு வருமாறு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. அதிமுக எம்.எல்.ஏ.க்களுடன் ஆலோசனை செய்த பிறகு முதல்வர் வேட்பாளர் யார் என அறிவிக்கப்படும் என தகவல் வெளியாகியுள்ளது.