Sunday, October 4, 2020

ஆசிரியையின் மீது திரவத்தை தெளித்துரூ.1 ஒரு லட்சம் கொள்ளை



நாமக்கல் மாவட்டம் குமாரபாளையத்தில் வங்கியிலிருந்து பணம் எடுத்து வந்த ஆசிரியை மீது திரவத்தை வீசி கவனத்தை திசைதிருப்பி ஒரு லட்சம் ரூபாய் பணம் கொள்ளையடிக்கப்பட்டுள்ளது. தனலட்சுமி என்ற ஆசிரியை ஓலப் பாளையம் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில் தலைமை ஆசிரியராக பணிபுரிகிறார்.

தனது செலவிற்காக சேலம் முதன்மைச் சாலையில் உள்ள வங்கியிலிருந்து ஒரு லட்சம் ரூபாய் பணத்தை எடுத்துக்கொண்டு துணிப்பையில் வைத்து அதனை வையர் கூடையில் வைத்துக் கொண்டு தன் கணவருடன் இருசக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்தார். எல்ஐசி அலுவலகத்திற்கு அருகே பணம் செலுத்துவதற்காக கணவர் உள்ளே சென்ற நேரத்தில் , ஆசிரியை தனலட்சுமி வெளியே நின்று கொண்டிருந்தார்.

அப்போது மேலே ஏதோ ஈரம் படவே அருகில் உள்ள மளிகை கடைக்கு சென்று மீண்டும் கணவருடன் வீட்டுக்கு வந்தார். அப்போதுதான் பணம் வைத்திருந்த பையும், செல்போனும் காணாமல் போனது தெரியவந்தது. சம்பவம் தொடர்பாக கொடுக்கப்பட்ட புகாரின் பேரில் சிசிடிவி காட்சிகளை சோதனை செய்ய போது , ஆசிரியை தனலட்சுமி பின்புறம் நின்ற ஒரு இளைஞர் அவர் மீது திரவத்தை வீசுவதும் பின்னர் அவரிடம் பேச்சுக் கொடுப்பதும் தெரியவந்தது.

No comments:

Post a Comment

Pages