நீதிமன்ற அவமதிப்பு வழக்கில் ஒரு ரூபாய் அபராதம் விதித்த தீர்ப்பை மறு ஆய்வு செய்யக் கோரி உச்சநீதிமன்றத்தில் மூத்த வழக்கறிஞர் பிரசாந்த் பூஷன் மனு தாக்கல் செய்துள்ளார். டெல்லியைச் சேர்ந்த மூத்த வழக்கறிஞர் பிரசாந்த் பூஷன் உச்ச நீதிமன்றத்தையும் தலைமை நீதிபதிகளையும் விமர்சித்திருந்தார். உச்சநீதிமன்றம் தாமாக முன்வந்து அவருக்கு எதிராக நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தொடர்ந்தது.

பூசனை குற்றவாளி என தீர்ப்பளித்த நீதிமன்றம் மன்னிப்பு கேட்டால் அவரை விடுவிப்பதாக அறிவித்தது. ஆனால் பூசன் மன்னிப்பு கேட்க மறுத்துவிட்டார். இதனையடுத்து அவருக்கு ஒரு ரூபாய் அபராதம் விதித்த நீதிமன்றம் செப்டம்பர் 15-ஆம் தேதிக்குள் அபராத தொகையை செலுத்தா விட்டால் 3 மாதம் சிறை தண்டனை விதிக்கப்படும் என்றும் எச்சரித்தது. இதைத் தொடர்ந்து உச்ச நீதிமன்ற பதிவாளரிடம் அபராதத் தொகையான ஒரு ரூபாயை பூஷன் செலுத்தினார்.

இந்நிலையில் நீதிமன்ற அவமதிப்பு வழக்கில் ரூபாய் அபராதம் விதித்த தீர்ப்பை மறு ஆய்வு செய்யக்கோரி சினிமா மன்றத்தில் வழக்கறிஞர் பிரசாந்த் பூஷன் மனு தாக்கல் செய்துள்ளார். எதிர்ப்புக் குரலை மௌனமாக்க அரசு அனைத்து வழிகளையும் பயன்படுத்துவதாகவும் பிரசாந்த் பூஷன் குற்றம்சாட்டினார்.