தூத்துக்குடி மாவட்டம் சாத்தான்குளம் அருகே எச்ஐவியால் பாதிக்கப்பட்ட 10 ஜோடிகளின் திருமண வரவேற்பு நிகழ்ச்சி மாவட்ட ஆட்சியர் தலைமையில் நடந்தது.

ஆனந்தபுரத்தில் கல்வாரி சாப்டர் டிரஸ்ட் என்கிற பெயரில் அறக்கட்டளை இயங்கி வருகிறது. இந்த நிலையில் எச்ஐவியால் பாதிக்கப்பட்டோரில் டிரஸ்ட் மூலம் படித்து முன்னேறிய பத்து ஜோடிகளுக்கு இன்று திருமண வரவேற்பு நிகழ்ச்சி நடந்தது.

இந்நிகழ்வில் கலந்துகொண்ட மாவட்ட ஆட்சியர் சந்தீப் நந்தூரி எச்ஐவி பாதித்தோருக்கு உதவும் நலம்விரும்பிகளுக்கு விருது வழங்கியதோடு டிரஸ்ட் சார்பில் கட்டப்பட்ட சமூக நலக்கூடம் மற்றும் தங்கும் விடுதியையும் தொடங்கி வைத்தார்.