அதிமுகவில் முதலமைச்சர் வேட்பாளர் தொடர்பாக அடுத்த வாரம் அறிவிப்பு வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ள நிலையில் முதலமைச்சர் மற்றும் துணை முதலமைச்சரை அவரது ஆதரவு அமைச்சர்களும் கட்சி நிர்வாகிகளும் தனித்தனியே சந்தித்து ஆலோசனையில் ஈடுபட்டனர். அக்டோபர் 7 அதிமுக மட்டுமல்ல தமிழக அரசியல் களமே ஆவலோடு உற்று நோக்கும் நாள்.

அடுத்த ஆண்டிற்கான சட்டமன்ற தேர்தலில் திமுகவின் முதல்வர் வேட்பாளர் யார் என அறிவிக்கப்படும் என அக்கட்சி தெரிவித்திருக்கும் நிலையில் அதற்கான முன்னெடுப்புகள் தொடங்கிவிட்டன.

ஓபிஎஸ் இபிஎஸ் இருவரில் யார் தேர்வு செய்யப்படுவார் என எதிர்பார்க்கும் சூழலில் கிரீன்வே சாலையில் உள்ள முதலமைச்சர் இல்லத்தில் அதிமுக துணை ஒருங்கிணைப்பாளர்கள் வைத்திலிங்கம் கேபி முனுசாமி மற்றும் மனோஜ் பாண்டியன் ஆலோசனையில் ஈடுபட்டனர். ஓபிஎஸ் உடனான சந்திப்பை தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய அவர்கள் இது வழக்கமான ஆலோசனை தான் என்றும் தற்போதைய குழப்பத்தால் ஆட்சிக்கு எந்த வித பாதிப்பும் இல்லை என கூறினர்.