மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் தேமுதிக தலைவர் விஜயகாந்த் நாளை மாலை வீடு திரும்புவார் என எல்.கே.சுதீஸ் தெரிவித்துள்ளார். வேலூர் மாவட்டம் குடியாத்தத்தில் செய்தியாளர்களிடம் பேசிய அவர் வரும் சட்டமன்ற தேர்தலில் தேமுதிக மாபெரும் சக்தியாக இருக்கும் என தெரிவித்தார்.

உடல்நலம் பாதிக்கப்பட்டு தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் தேமுதிக தலைவர் விஜயகாந்த் சிகிச்சை முடிந்து நாளை மாலை வீடு திரும்புகிறார் என்றும் தெரிவித்தார். தற்போதுவரை அதிமுக கூட்டணியில் தான் இருக்கிறோம் எனவும் வரும் சட்டமன்ற தேர்தலில் யாருடன் கூட்டணி என்பது டிசம்பர் அல்லது ஜனவரி மாதம் செயற்குழு கூடி முறையாக விஜயகாந்த் அறிவிப்பார் என சுதீஷ் தெரிவித்தார்.

அவர் கூறியதாவது, எங்கள் கேப்டன் அவர்கள் நாளை திங்கட்கிழமை காலை மருத்துவமனையிலிருந்து வீடு திரும்பயிருக்கிறார் எனவும் அவர் கூறினார். சசிகலா சிறையை விட்டு வெளியே வரும்போது அதிமுகவில் மிகப்பெரிய மாற்றம் வரலாம் எனவும் அவர் கூறினார்.