சீனாவுடனான எல்லைப் பிரச்சினை தொடர்பாக அமைச்சர்கள் அதிகாரிகளுடன் பிரதமர் நரேந்திரமோடி இன்று மாலை ஆலோசனையில் ஈடுபட இருக்கிறார். இந்திய சீன எல்லை தொடர்பாக பேச்சு வார்த்தை நடந்து கொண்டிருக்கும் நிலையில் நேற்றைய தினம் இரவு சீனாவின் ஊடகத்தில் ஒரு தகவல் வெளியாகி இருக்கிறது. இந்திய ராணுவ வீரர்கள் எல்லையை மீறியதாகவும் , வானில் துப்பாக்கி சூடு நடத்தியதாகவும் சீனா தரப்பு ஒரு குற்றச்சாட்டு வைத்திருந்தார்கள்.

இதுபற்றி இந்திய ராணுவம் நாங்கள் எல்லை மீறவில்லை எந்தத் துப்பாக்கி சுடும் நடத்தவில்லை என இந்திய தரப்பில் தெரிவித்துள்ளார்கள். சீன ராணுவம் தான் வானில் துப்பாகி சூடு நடத்தியதாகவும், எல்லையை மீறியதாகவும் குற்றச்சாட்டு வைத்திருந்தார்கள். எல்லை கட்டுப்பாட்டு பகுதியில் சீனா ரோந்து வாகனம் மீது இந்தியா அத்துமீறியதாக சீனா குற்றச்சாட்டு வைத்திருந்தது. இதை மறுத்து இந்திய ராணுவம் ஒரு அறிக்கை வெளியிட்டுள்ளது. இந்நிலையில் இன்று மாலை 6 மணிக்கு மத்திய அமைச்சரவை கூட்டம் கூட இருக்கிறது. இதற்கு முன்பு பாதுகாப்பு துறை அமைச்சரும் ராணுவ அதிகாரிகளுடன் பிரதமர் நரேந்திர மோடி ஒரு ஆலோசனை கூட்டம் மேற்கொள்ள இருக்கிறார். இந்திய சீன எல்லையில் பதற்றமான சூழ்நிலை நிலவி வரும் நிலையில் அமைச்சர்களுடனும் அதிகாரிகளுடனும் விவாதிக்கப்படுகிறது. உச்ச கட்ட நடவடிக்கை என்ன எடுப்பது என்று குறித்தும் விவரிக்கப்பட உள்ளது.

இந்நிலையில் சற்று முன்பு ஒரு புதிய தகவலும் வந்துள்ளது. சீன வெளியுறவுத்துறை அமைச்சகம் மேலும் அதே குற்றச்சாட்டை வைக்கிறார்கள். நாங்கள் யாரும் எல்லையை மீறவில்லை இந்திய வீரர்கள் தான் எல்லையை மீறியதாகவும், அவர்கள்தான் வானில் துப்பாக்கிச் சூடு நடத்தியதாகவும் சீன வெளியுறவுத்துறை அமைச்சகம் ஒரு அறிக்கை வெளியிட்டுள்ளது. மேலும் இந்த அமைச்சரவை கூட்டத்தில் அடுத்த கட்ட நகர்வு என்னவென்று அனைவராலும் எதிர்பார்க்கப்பட்டு வருகிறது. சீனாவிற்கும் இந்தியாவிற்கும் ஒருமுறை மட்டுமே போர் நடந்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.