விவசாயி எனக்கூறிக்கொண்டு விவசாயிகளுக்கு முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி துரோகம் செய்து இருப்பதாக திமுக தலைவர் ஸ்டாலின் குற்றம்சாட்டியுள்ளார். கருவூரில் ஏற்பாடு செய்யப்பட்ட முப்பெரும் விழாவில் மாவட்டம் முழுவதும் 545 இடங்களில் இருந்து தலா 100 பேர் வீதம் பங்கேற்றனர்.

காணொளியில் பேசிய திமுக தலைவர் மு.க ஸ்டாலின் பொது முடக்கத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு மாதம் 5 ஆயிரம் ரூபாய் வழங்க வேண்டும் என ஐந்து மாதங்களாக வலியுறுத்தியதை அரசு செய்யவில்லை என்றும் குற்றம் சாட்டினார். இதுகுறித்து அவர் பேசுகையில் நானும் விவசாயி நானும் விவசாயி என்று எடப்பாடி பழனிச்சாமி சொல்லியிருக்கிறாரே தவிர விவசாயியாக நடந்துகொள்ளவில்லை.

விவசாயிகளுனுடைய விரோத சட்டத்திற்கு ஆதரவாக அறிக்கை விட்டிருக்கிறார். இதைவிட விவசாயிகளுக்கு வேறு என்ன துரோகம் இருக்க முடியுமா எனவும் பச்சை துண்டை போட்டு நடித்த பச்சை துரோகம் இது.கொரோனாவை விட கொடிய ஊழல் வைரஸ் கூட்டத்தை இந்த கோட்டை களிலிருந்து விரட்டிட வேண்டும் எனவும் திமுக தலைவர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.