பாபர் மசூதி வழக்கில் இன்று தீர்ப்பு வெளிவர இருப்பதால் சென்னையில் முக்கிய ரயில் நிலையங்கள் உள்ளிட்ட நூற்றுக்கும் மேற்பட்ட காவல்துறையினர் சூழல் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர். பாரதிய ஜனதா கட்சியின் மூத்த தலைவர்கள் எல்.கே அத்வானி, முரளி மனோகர் ஜோஷி, உமா பாரதி உள்ளிட்ட 32 பேர் மீதான பாபர் மசூதி இடிப்பு வழக்கில் லக்னோ சிறப்பு நீதிமன்றம் இன்று தீர்ப்பு வழங்க உள்ளது.

இந்த நிலையில் சென்னை எழும்பூர் ரயில் நிலையத்தில் எஸ்.பி எட்வர்ட் தலைமையில் பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டு 300க்கும் மேற்பட்ட காவல் துறை பணியாளர்கள் அனைத்து வாயில்களிலும் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர். மேலும் மோப்ப நாய்களை கொண்டு சோதனை செய்யப்படுகிறது.

சிறப்பு ரயிலில் பயணம் செய்யும் பயணிகள் அனைவருமே சோதனை செய்யப்பட்ட பிறகே ரயில் நிலையங்களுக்கு அனுமதிக்கப்படுகிறார்கள். இதே போல சென்ட்ரல் ,மாம்பலம், தாம்பரம் உள்ளிட்ட முக்கிய ரயில் நிலையங்களிலும் அரசு அலுவலகங்களிலும் மசூதிகளிலும் கூடுதல் பாதுகாப்பு பணிகளில் ஈடுபட்டு வருகின்றனர். தமிழகத்தின் பிற பகுதிகளிலும் முக்கிய இடங்களிலும் பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது.