ரீமேக் படங்களாக இயக்கிவந்த இயக்குனர் மோகன் ராஜாவிற்கு நல்லதொரு அங்கிகாரத்தை பெற்றுத் தந்தது ‘தனி ஒருவன்’ படம். தென்னிந்தியா முழுவதும் பெரும் வரவேற்ப்பை பெற்ற இந்த படத்தின் இரண்டாம் பாகம் அறிவிக்கப்பட்டு ஓராண்டுக்கும் மேலாகிவிட்டது.

2015-ஆம் ஆண்டு ஜெயம் ரவி, நயன்தாரா, அரவிந்த் சாமி உள்ளிட்டோர் நடிப்பில் மோகன் ராஜா இயக்கத்தில் வெளியாகி சூப்பர் ஹிட் அடித்த திரைப்படம் தனி ஒருவன். இந்த படம் வெளியாகி தற்போது 5 ஆண்டுகள் நிறைவடைந்துள்ளது. இத்திரைப்படத்தில் ஜெயம் ரவி மற்றும் அரவிந்த் சாமி ஆகியோரின் நடிப்பு பெரிதும் ரசிக்கப்பட்டது. எத்தனையோ போலீஸ் ஸ்டோரிஸ் பார்த்திருந்தாலும் தனி ஒருவன் தனித்துவமான கதையாகவே மனதில் நின்றிருக்கும். அதற்கு படத்தின் வில்லனாக வந்த அரவிந்த் சாமியின் கேரக்டரே மிக முக்கிய காரணம்.

இந்த நிலையில் ‘தனி ஒருவன்-2’ படத்தில் யார் வில்லனாக நடிப்பார் என்கிற கேள்வி எல்லோர் மனதிலும் இருந்தது தற்போது இதில் நடிகர் மோகன் லால் வில்லனாக நடிக்க பேச்சு வார்த்தை நடந்து வருவதாக தகவல்கள் பரவி வருகிறது. நேச்சுரல் ஸ்டாரான மோகன்லால் நிச்சயம் அரவிந்த் சாமியின் இடத்தை நிறப்புவார் என்பதில் சந்தேகமில்லை, ஆனால் வில்லனாக நடிக்க அவர் ஒப்புக்கொள்வாரா என்பதே சந்தேகம். பொருத்திருந்து பார்ப்போம்.