மறைந்த பாடகர் எஸ் பி பாலசுப்பிரமணியத்திற்க்கு திருவள்ளூர் மாவட்டம் தாமரைப்பாக்கத்தில் நினைவு இல்லம் கட்டப்படும் என அவரது மகன் எஸ்.பி சரண் தெரிவித்துள்ளார். உடல்நலக்குறைவால் உயிரிழந்த எஸ்.பி பாலசுப்ரமணியத்தின் உடல் தாமரை பக்கத்தில் உள்ள அவரது பண்ணை வீட்டில் நேற்று நல்லடக்கம் செய்யப்பட்டது.

இந்நிலையில் செய்தியாளர்களை சந்தித்த அவரது மகன் எஸ்.பி சரண் தமிழக அரசு , காவல்துறை, பொதுமக்கள் , ரசிகர்கள் அனைவருக்கும் நன்றி தெரிவித்தார். மேலும் எஸ்.பி.பி க்கு அஞ்சலி செலுத்த மக்கள் திரண்டு வந்தது நிகழ்ச்சியை ஏற்படுத்தியதாக கூறிய சரண் , எஸ்.பி.பி உடல் அடக்கம் செய்யப்பட்டுள்ள இடத்தில் நினைவு இல்லம் கட்டப்பட உள்ளதாக தெரிவித்தார்.

பாடகர் எஸ்.பி.பி க்கு பாரத ரத்னா விருது நிச்சயம் கிடைக்கும் என இசையமைப்பாளர் கங்கை அமரன் தெரிவித்துள்ளார். தஞ்சையில் செய்தியாளர்களிடம் பேசிய அவர் மேலும் பாரத ரத்னா விருது வாங்கும் குழுவில் தானும் ஒரு உறுப்பினராக இருப்பதால் விருது வழங்குவதற்கான முயற்சியை எடுப்பேன் என கூறினார்.