சிவகங்கை மாவட்டம் கீழடியில் நடைபெற்று வந்த ஆறாம் கட்ட அகழ்வாராய்ச்சி பணிகள் இன்றுடன் நிறைவு பெறுகிறது. சிவகங்கை மாவட்டம் கீழடி கடந்த பிப்ரவரி மாதம் 19ம் தேதி முதல் ஆறாம் கட்ட அகழ்வாராய்ச்சி பணிகளானது தொடங்கி நடைபெற்றுக் கொண்டிருக்கும் நிலையில் இன்றுடன் இந்த பணிகள் நிறைவடைய இருக்கிறது.

குறிப்பாக தொன்மையான மனிதர்களின் இன மரபியல் ,வாழ்வியல் முறை ,தொழில்முறை ஆகியவற்றை முழுமையாக அறியும் வகையில் இந்த ஆறாம் கட்ட அகழ்வாராய்ச்சி பணியானது கீழடி, அகரம், கொந்தகை, மணலூர் ஆகிய நான்கு இடங்களில் மேற்கொள்ளப்பட்டு வந்தது. இந்த அகழ்வாராய்ச்சியின் பொழுது 20 மனித எலும்புக்கூடுகள் ,29 முதுமக்கள் தாழி அதுமட்டுமல்லாமல் விலங்கு எலும்புக்கூடுகள் இருபத்தி மூன்று அடுக்குகள் கொண்ட உறை கிணறு, சூதுபவளம் , சங்கு வளையல்கள் உள்ளிட்ட அணிகலன்கள் ,தங்க நாணயங்கள், படிக்கற்கள் உள்ளிட்ட 3 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பொருட்களானது இந்த அகழ்வாராய்ச்சியில் கண்டறியப்பட்டிருக்கிறது.

பல்வேறு புதிய இதுவரை ஐந்து கட்ட அகழ்வாராய்ச்சியில் கிடைக்கப்பெறாத பல்வேறு புதிய வகையிலான தொன்மையான பொருட்கள் கண்டெடுக்கப்பட்டிருக்கக்கூடிய நிலையில் இங்கு தான் இந்தப் பணியானது நிறைவடைய இருக்கிறது. ஏழாம் கட்ட அகழ்வாராய்ச்சி பணிகளும் இதேபோன்று விரிவான முறையில்கீழடி, கந்தகம், அகரம், மணலூர் ஆகிய நான்கு பகுதிகளிலும் இதனுடைய தொடர்ச்சியான அகழ்வாராய்ச்சி பணிகளை மேற்கொள்ளவுள்ளதாக தொல்லியல் துறை தெரிவித்திருக்கிறார்கள்.