தமிழகத்தில் கொரோணா பாதித்தவர்களுக்கு ஒரு மருந்து பெரிதும் உதவுகிறது. எந்த அளவு பாதிக்கப்பட்டவருக்கு எந்த மருந்து கொடுக்கப்படுகிறது என்றால் கொரோணா தொற்று பாதித்தவர்களுக்கு அதன் தன்மையை பொறுத்து சிகிச்சை அளிக்கப்படுகிறது. லேசான பாதிப்பு, ஓரளவு பாதிப்பு,தீவிர பாதிப்பு என மூன்று வகைகளாக பிரிக்கப்படுகின்றன. இதில் சளி, இருமல், காய்ச்சல் என லேசான பாதிப்பு இருப்போருக்கு நாளொன்றுக்கு 100 மில்லி கிராம் என்ற அளவில் ஐந்து நாட்களுக்கு அசித்ரோமைசின் மருந்து கொடுக்கப்படுகிறது.

இதைத் தவிர காய்ச்சலுக்கு மாத்திரை மற்றும் நோய் எதிர்ப்புத்திறன் அதிகரிப்பதற்காக வைட்டமின் சி மற்றும் சிங்க் மாத்திரைகள் வழங்கப்படுகின்றன. இதேபோல் ஓரளவு கொரோமணா தொற்று இருப்போருக்கு 25 முதல் 30 சதவீதம் அளவில் நுரையீரலில் பாதிப்பு ஏற்படும் . இதனால் அவர்களுக்கு லோ மாலிக்குலார் ஹெப்பாரின், டெக்ஸாமெத்தசோன் ஆகிய மருந்துகள் கொடுக்கப்படுகின்றன. நுரையீரல் இதயம் சிறுநீரகம் போன்ற பகுதிகளுக்கு செல்லும் ரத்த குழாய்களில் அடைப்பு ஏற்படாமல் இம்மருந்து தடுக்கிறது.

கொரோணா தொற்று உடலில் இரட்டிப்பாவதை தடுக்க ரெம்டெசிவிர் மருந்தும் பயன்படுத்தப்படுகிறது. இதற்கு அடுத்த நிலையான தீவிர பாதிப்பு இருப்பவர்களுக்கு கூடுதல் கவனம் செலுத்தப்படுகிறது. நுரையீரல் பாதிப்பு அதிகம் இருக்கலாம் என்பதால் செயற்கை சுவாசம் பொருத்தி கண்காணிப்பில் இருப்பர். இதனைத் தொடர்ந்து 40 ஆயிரம் ரூபாய் மதிப்புடைய டோசிலிசுமாப் மருந்து வழங்கப்படும் போது பெரிய அளவில் பலன் கிடைப்பதாக மருத்துவர்கள் கூறுகின்றனர்.